தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 428 பேர் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 428 பேர் கைது. 


நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 428 பேர் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (27) நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலானோர் கண்டி,மாத்தளை,கம்பளை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் கண்டியில் 93 பேரும், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 77 பேரும், கம்பளை பகுதியைச் சேர்ந்த 58 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை மொத்தமாக 44,644 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோர் தொடர்பில் தொடர்ந்தும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.