குர்ஆனை மனனம் செய்துள்ள உலகின் முதல் ‘டவுன் சின்ட்ரம்’ சிறுமி றவ்வான் அல் துவைக்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


குர்ஆனை மனனம் செய்துள்ள உலகின் முதல் ‘டவுன் சின்ட்ரம்’ சிறுமி றவ்வான் அல் துவைக். 

ஜோர்தான் நாட்டைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றவ்வான் அல் துவைக் என்ற சிறுமி தனக்­கி­ருக்­கின்ற Down syndrome (டவுன் சின்ட்ரம்) குறை­பாட்­டுக்கு மத்­தியில் தற்­போது குர்­ஆனை முழு­மை­யாக மனனம் செய்து சாதனை படைத்­துள்ளார். 

குர் ஆனை முழு­மை­யாக மனனம் செய்­துள்ள உலகின் முதல் Down syndrome பெண் பிள்­ளை­யாக றவ்வான் அடை­யாளம் காணப்பட்டுள்ளார். தனது தாயின் உத­வி­யுடன் சுமார் ஏழு வருட முயற்­சியின் பல­னாக தற்­போது றவ்வான் குர்­ஆனை மனனம் செய்து முடித்­துள்ளார். 

டவுன் சின்ட்ரம் என்­பது ஒரு பிள்ளை அதன் மர­ப­ணுவின் (டி.என்.ஏ) 21 வது குரோ­மோ­சோமின் கூடுதல் நக­லுடன் பிறக்­கின்ற நிலைமை ஆகும். இந்த பாதிப்பு நிலைமை ட்ரிசோமி 21 என்றும் அழைக்கப்படுகின்­றது. 

இது உடல் மற்றும் மன வளர்ச்சி மேம்படுவதில் தாம­தங்­களை ஏற்­ப­டுத்­து­வ­துடன் குறித்த விடயங்களில் குறை­பா­டு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது. இந்த நிலை­மையே ஆங்­கி­லத்­தில் டவுன் சின்ட்ரோம் என்று அழைக்கப்­ப­டு­கி­றது. இந்த குறை­பாட்­டி­னா­லேயே றவ்வான் பாதிக்கப்­பட்­டுள்ளார். 

ஆறு பிள்­ளைகள் உள்ள குடும்­பத்தில் றவ்வான் கடைசிப் பிள்ளை ஆவார். தந்­தையை இழந்­துள்ள றவ்­வா­னுக்கு நான்கு சகோ­த­ரி­களும் ஒரு சகோ­த­ரரும் இருக்­கி­றார்கள். குர்ஆன் வச­னங்­களை எழு­து­வதன் ஊடாக அவர் முழுக் குர்ஆனையும் மனனம் செய்­துள்ளார். தனது மக­ளுக்கு சிறந்த முறையில் உச்­ச­ரிப்புத் திறன் இருப்­பதன் ஊடாக இறைவன் தனது மகளை ஆசிர்­வ­தித்­துள்­ள­தாக றவ்­வானின் தாயான அவாதெப் ஜபர் தெரி­விக்­கிறார்.

 றவ்வான் மிகுந்த விருப்­பத்­துடன் குர்­ஆனை மனனம் செய்து முடித்­துள்­ள­தாக அவ­ரது தாயார் தெரி­விக்­கிறார். றவ்­வானின் இந்த சாதனை தொடர்­பாக கருத்து தெரி­விக்கும் அவாதெப் ஜபர் “றவ்வான் பிறந்­த­போது அவர் இவ்­வா­றான நோய்க்குறியால் அவ­திப்­ப­டு­கிறார் என்­பதை அறிந்­த­போது எந்தவொரு தாயையும் போல நானும் சோக­மா­கவும் வருத்­த­மா­கவும் உணர்ந்தேன். 

ஆனால் நான் றவ்­வானை மிகவும் நேசித்தேன். குர்ஆனைப் படிக்க நான் அவ­ளுக்குக் கற்­பிப்பேன் என்று இறைவனிடம் சத்­தியம் செய்தேன். அதை மனப்­பாடம் செய்­யவே இறைவன் எழு­தி­யி­ருக்­கிறான். அதைப் பாது­காப்­பதன் மூலம் றவ்வான் என்னை கௌர­வித்­துள்ளார்” என தெரி­விக்­கிறார். 

“றவ்வான் மிகவும் புத்­தி­சாலி, அவ­ரு­டைய புத்­தி­சா­லித்­த­னத்­தையும் நுண்­ண­றி­வையும் கண்­ட­றிந்­த­போது மிகச்சிறிய சூராக்­களை அவருக்குக் கற்­பிக்கத் தொடங்­கினேன். அவர் மிக விரை­வாக மனப்பாடம் செய்தார்” என தாயார் அவாதெப் ஜபர் தெரி­விக்­கிறார். 

இந்­நி­லையில் றவ்வான் ஆறு வயதை அடை­யும்­போது பாடசாலையில் சேர்க்­கப்­பட்டார். அவர் பாட­சாலைக் கல்­வியில் சிறந்து விளங்­கி­ய­போதும் ஏழாம் வகுப்பு வரை மாத்­தி­ரமே அவரால் படிக்க முடிந்­தது. பின்­ நாட்­களில் அவர் பாட­சாலை செல்­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்த நிலையில் குர்­ஆனை மனனம் செய்­வதில் கவனம் செலுத்­தினார்.

 எழு­து­வதன் ஊடா­கவே றவ்வான் அதி­க­மாக குர்ஆனை மனனம் செய்­துள்ளார். சூரதுல் பக­ராவை ஒரு வருட காலத்­திற்குள் மனனம் செய்து நிறைவு செய்­த­துடன் அதனைப் பரீட்­சிக்கும் சோத­னையில் மொத்தப் புள்­ளி­க­ளையும் றவ்வான் தன்­வ­சப்­ப­டுத்­தினார்.

 தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் குர்ஆனை மனனம் செய்துள்ள றவ்வான் கடந்த றமழான் பிறை 29 இல் மனனம் செய்து நிறைவு செய்துள்ளார். அங்கீகரிப்பட்ட குழுவொன்றினால் அவர் பரீட்சிக்கப்பட்டு அவர் குர்ஆனை மனனம் செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.