தயவு செய்து வேண்டாம்... தன்னை சந்திக்க 900 கி.மீ பயணம் செய்த தீவிர ரசிகருக்கு வேண்டுகோள் விடுத்த நடிகை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

தயவு செய்து வேண்டாம்... தன்னை சந்திக்க 900 கி.மீ பயணம் செய்த தீவிர ரசிகருக்கு வேண்டுகோள் விடுத்த நடிகை! 


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா. இவர் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழ் இளம் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.

 இதைத்தொடர்ந்து விரைவில் இந்தியிலும் அறிமுகமாக உள்ளார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் திரிபாதி. இவர் நடிகை ரஷ்மிகாவின் தீவில் ரசிகர்.

 இவர் ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்து, சுமார் 900 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார். இருப்பினும் அவரால் ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த சிலர், இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷிடம் விசாரணை நடத்திய போலீசார், குடகு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அறிவுரை கூறி தெலங்கானாவுக்கு திருப்பி அனுப்பினர். 

இதுகுறித்த தகவல் மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு தெரியவந்தது. இதனால் நடிகை ராஷ்மிகா தனது ரசிகரிடம், ‘டுவிட்டர்’ வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். 

தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம். உங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.