செல்போன் மூலம் முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறை - எங்கு தெரியுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 செல்போன் மூலம் முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறை - எங்கு தெரியுமா? 


பொதுமக்களின் முகத்தை ஸ்மார்ட் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீன முறை அபுதாபியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி ,இ.டி.இ. எனப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் உதவியால் செயல்படக்கூடியது. சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பொருத்தப்பட்டு அதன் தொடர்பு ஒரு ஸ்மார்ட் செல்போனுடன் இணைக்கப்படும்.

அந்த செல்போனை வைத்து வணிக வளாகம் அல்லது கட்டிடத்திற்குள் வருவோரை காவலாளி அல்லது ஊழியரின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் ஒரு சில வினாடிகளில் அவருக்கு கொரோனா உள்ளதா? இல்லையா? என்பது அறிந்து கொள்ள முடியும்.

 மேலும் ,பச்சை நிறம் ஒளிர்ந்தால் கொரோனா இல்லை என்றும் சிவப்பு நிறம் ஒளிர்ந்தால் கொரோனா உள்ளது என்றும் அர்த்தமாகும். இதனை அடுத்து சிவப்பு நிறம் ஒளிர்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படும். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.