புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 12 பேர் பலி...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

புளோரிடாவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 12 பேர் பலி... 

புளோரிடாவில் கட்டடம் இடிந்த பகுதியில் ஆறாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் தேடல் மற்றும் மீட்பு முயற்சியின்படி இதுவரை 12 பேர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 இதன்படி ,அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தற்செயலான கட்டமைப்பு தோல்வி என மதிப்பிடக்கூடிய பேரழிவின் காரணமாக 149 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

40 ஆண்டுகள் பழமையான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே உள்ள 12 மாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த வியாழக்கிழமை திடீரென இடிந்து வீழ்ந்தது. அதற்கு ,கட்டமைப்பு குறைபாடுகளே காரணம் என பொறியியலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ,கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிற நிலையில் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.