வரலாற்றில் இன்று ஜூலை 18.

 வரலாற்றில் இன்று ஜூலை 18.


ஜுலை 18  கிரிகோரியன் ஆண்டின் 199 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 200 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 166 நாட்கள் உள்ளன.


 இன்றைய தின நிகழ்வுகள்.


👉64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.

👉362 – ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார்.

👉1290 – பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.

👉1389 – நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.

👉1391 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார்.

👉1806 – மால்ட்டா, பிர்கு நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.

👉1812 – ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன.

👉1841 – இரண்டாம் பெதுரோ பிரேசில் பேரரசராக முடிசூடினார்.

👉1870 – முதலாவது வத்திக்கான் பேரவை திருத்தந்தையின் தவறா வரக் கோட்பாட்டிற்கு ஆணையிட்டது.

👉1872 – ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் நாடாளுமன்ற, உள்ளூராட்சித் தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

👉1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.

👉1925 – இட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது.

👉1942 – செருமனி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 வானூர்தியை சோதனைக்காகப் பறக்கவிட்டது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில், யுகொசுலாவியப் போர்க் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து சப்பானியப் பிரதமர் இதெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.

👉1966 – மனித விண்வெளிப்பறப்பு: நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.

👉1968 – இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.

👉1976 – 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் முதற்தடவையாக சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

👉1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

👉1982 – குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

👉1984 – கலிபோர்னியாவில் மெக்டொனால்ட்சு உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர்.

👉1994 – அர்கெந்தீனாவில் புவெனசு ஐரிசு நகரில் யூத சமூக மையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர், 300 பேர் காயமடைந்தனர்.

👉1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.

👉1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.

👉1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1200 படையினர் கொல்லப்பட்டனர்.

👉1997 – மும்பையில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

👉2007 – மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.

👉2012 – பல்காரியாவில் இசுரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.

👉2013 – அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, $20 பில்லியன் கடனுடன், திவாலா நிலை யை அடைந்தது.


இன்றைய தின பிறப்புகள்.


👉1852 – பால் கேரஸ், செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1919)

👉1853 – என்ட்ரிக் லொரன்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பிலாளர் (இ. 1928)

👉1893 – ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில், திருவிதாங்கூர் விடுதலை இயக்கப் போராளி (இ. 1957)

👉1861 – கடம்பினி கங்கூலி, இந்தியப் பெண் மருத்துவர் (இ. 1923)

👉1909 – இரா. கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 1997)

👉1918 – நெல்சன் மண்டேலா, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் (இ. 2013)

👉1919 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமஸ்தானத்தின் 25வது, கடைசி அரசர் (இ. 1974)

👉1926 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (இ. 2015)

👉1927 – மெகுதி அசன், பாக்கித்தானியப் பாடகர் (இ. 2012)

👉1935 – செயந்திர சரசுவதி, இந்திய ஆன்மிகத் தலைவர், 69வது சங்கராச்சாரியார்.

👉1950 – றிச்சர்ட் பிரான்சன், ஆங்கிலேயத் தொழிலதிபர்

👉1950 – யக் லேற்ரன், கனடா அரசியல்வாதி (இ. 2011)

👉1964 – வெண்டி வில்லியம்சு, அமெரிக்க ஊடகவியலாளர்.

👉1967 – வின் டீசல், அமெரிக்க நடிகர், இயக்குநர்.

👉1971 – சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)

👉1971 – சுக்விந்தர் சிங், இந்தியப் பாடகர், நடிகர்.

👉1975 – மாதங்கி அருள்பிரகாசம், ஆங்கிலேய–ஈழ ராப் இசைக் கலைஞர்.

👉1978 – ஜோ சாங்-வூக், தென்கொரிய நடிகர்.

👉1980 – கிறிஸ்டன் பெல், அமெரிக்க நடிகை, பாடகி.

👉1982 – பிரியங்கா சோப்ரா, இந்திய நடிகை.

👉1985 – சாஸ் கிராஃபோர்ட், அமெரிக்க நடிகர்.


இன்றைய தின இறப்புகள்.


👉1610 – கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (பி. 1573)

👉1721 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (பி. 1684)

👉1817 – ஜேன் ஆஸ்டின், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1775)

👉1931 – ஆஸ்கர் மின்கோவஸ்கி, செருமானிய நோயியலாளர், வானவியலாளர் (பி. 1858)

👉1974 – எஸ். வி. ரங்கராவ், தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் (பி: 1918)

👉1982 – உரோமன் யாக்கோபுசன், உருசிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1896)

👉2005 – சித்திரசேன, இலங்கை நடனக் கலைஞர் (பி. 1921)

👉2012 – ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர் (பி. 1942)

👉2013 – வாலி, தமிழகக் கவிஞர் (பி. 1931)

👉2013 – செ. பெருமாள், தமிழக அரசியல்வாதி (பி. 1950)

👉2013 – சமர் முகர்ஜி, இந்திய மார்க்சிய அரசியல்வாதி (பி. 1913)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.