வரலாற்றில் இன்று ஜூலை 24.

 வரலாற்றில் இன்று ஜூலை 24.



ஜூலை 24 கிரிகோரியன் ஆண்டின் 205 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 206 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 160 நாட்கள் உள்ளன.


 இன்றைய தின நிகழ்வுகள்.

👉1148 – இரண்டாம் சிலுவைப் போர்: பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி திமிஷ்கு நகரை முற்றுகையிட்டார்.

👉1304 – இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில்ன் இசுட்டெர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினார்.

👉1487 – நெதர்லாந்து லீயுவார்டன் நகர மக்கள் வெளிநாட்டு பியர் இறக்குமதித் தடையை எதிர்த்து பணி நிறுத்தம் செய்தனர்.

👉1567 – இசுக்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னனாக்கப்பட்டான்.

👉1783 – ஜோர்ஜிய இராச்சியம் உருசியாவின் காப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

👉1866 – அமெரிக்க உள்நாட்டுப் போரை அடுத்து டென்னிசி முதலாவது மாநிலமாக மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்தது.

👉1901 – வங்கி ஒன்றில் களவெடுத்த குற்றச்சாட்டில் ஒகையோ கொலம்பசு நகரில் சிறை வைக்கப்பட்டிருந்த ஓ ஹென்றி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

👉1911 – பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார்.

👉1915 – சிகாகோ ஆற்றில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.

👉1922 – பாலத்தீனம் தொடர்பான பிரித்தானியக் கட்டளையின் மாதிரி வரைபை உலக நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது 1923 செப்டம்பர் 26 இல் நடைமுறைக்கு வந்தது.

👉1923 – கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.

👉1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் செருமனியின் ஆம்பர்கு நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர், 280,000 கட்டடங்கள் அழிந்தன.

👉1959 – மாஸ்கோவில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்கத் துணைத் தலைவர் ரிச்சார்ட் நிக்சனும் சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ்வும் புகழ் பெற்ற அடுப்படி விவாதத்தில் கலந்து கொண்டனர்.

👉1969 – நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.

👉1977 – லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.

👉1982 – யப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர் உயிரிழந்தனர்.

👉1983 – இலங்கையில் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது. ஈழப்போரின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.

👉1991 – இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

👉1996 – கொழும்பு, தெகிவளையில் அளுத்கமை நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்றில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.

👉2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.

👉2007 – லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலத்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.

👉2013 – எசுப்பானியாவில் விரைவுத் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில், 78 பயணிகள் உயிரிழந்தனர்.

👉2014 – புர்க்கினா பாசோவில் இருந்து அல்ஜியர்சுக்கு சென்று கொண்டிருந்த ஏர் அல்சீரியா விமானம் 5017 மாலிவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 116 பேரும் உயிரிழந்தனர்.


இன்றைய தின பிறப்புகள்.


👉1783 – சிமோன் பொலிவார், வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 1830)

👉1802 – அலெக்சாண்டர் டூமா, பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1870)

👉1895 – றொபேட் கிறேவ்ஸ், ஆங்கிலேய-எசுப்பானிய எழுத்தாளர் (இ. 1985)

👉1897 – அமேலியா ஏர்ஃகாட், அமெரிக்க எழுத்தாளர், விமானி (இ. 1937)

👉1924 – திருச்சி லோகநாதன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1989)

👉1930 – கேசுபாய் படேல், குசராத்தின் 10வது முதலமைச்சர்.

👉1932 – தாமரைத்தீவான், ஈழத்து எழுத்தாளார்.

👉1934 – பி. எஸ். சூசைதாசன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2017)

👉1937 – மனோஜ் குமார், இந்திய நடிகர், இயக்குநர்.

👉1938 – ஓ. ஏ. இராமையா, இலங்கைத் தொழிற்சங்கவாதி, பொதுவுடமைவாதி (இ. 2013)

👉1945 – அசிம் பிரேம்ஜி, இந்தியத் தொழிலதிபர்.

👉1947 – சஹீர் அப்பாஸ், பாக்கித்தானித் துடுப்பாளர்.

👉1953 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)

👉1965 – டோக் லீமேன், அமெரிக்க இயக்குநர்.

👉1969 – ஜெனிஃபர் லோபஸ், அமெரிக்க நடிகை, பாடகி.

👉1979 – ரோஸ் பைரன், ஆத்திரேலிய நடிகை

👉1981 – டக் பொலிஞ்சர், ஆத்திரேலியத் துடுப்பாளர்

👉1982 – அண்ணா பகுய்ன், கனடிய-நியூசிலாந்து நடிகை


இன்றைய தின இறப்புகள்.

👉1862 – மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (பி. 1782)

👉1951 – ஐ. எக்ஸ். பெரைரா, இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1988)

👉1974 – ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1891)

👉1991 – ஐசக் பாஷவிஸ் சிங்கர், நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1902)

👉2012 – ஜோன் அட்டா மில்ஸ், கானாவின் 3வது அரசுத்தலைவர் (பி. 1944)

👉2013 – காரி டேவிஸ், அமெரிக்க விமானி, செயற்பாட்டாளர் (பி. 1921)

👉2017 – உடுப்பி ராமச்சந்திர ராவ், இந்திய இயற்பியலாளர் (பி. 1932)

👉2017 – யஷ் பால், இந்திய இயற்பியலாளர் (பி. 1926)


இன்றைய தின சிறப்பு நாள்.


👉காவல்துறையினர் நாள் (போலந்து)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.