பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த பேருந்துகள் - மூவருக்கு கொரோனா.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த பேருந்துகள் - மூவருக்கு கொரோனா. 

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி 3 அதி சொகுசு பேருந்துகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

செங்கலடி - பதுளை வீதியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் குறித்த பேருந்துகள் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது குறித்த பேருந்துகளுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான எவ்வித அனுமதிப்பத்தரமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. 

பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றாளர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.