வரலாறு காணாத வெப்பம் - பலியானோரின் எண்ணிக்கை உயர்வு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


வரலாறு காணாத வெப்பம் - பலியானோரின் எண்ணிக்கை உயர்வு. 

கனடாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி ,கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உலகின் மிகவும் குளிரான நாடுகளில் ஒன்றான கனடாவில் தற்போது வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது. கடும் வெப்பத்தால் தார் பாதைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ளளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் அண்மையில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. 

மேலும் ,வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு வீதியோரங்களில் நீர்த்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.