ஒரு கோடி ரூபா பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


ஒரு கோடி ரூபா பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது. 

நீர்கொழும்பு – தலுபொத்த பிரதேசத்தில் பெருந்தொகையான மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ருபா என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை பதுக்கிவைத்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீர்கொழும்பு காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மேலும் இதுதொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.