11 வருடங்கள் கடந்தும் நியாஸ் மௌலவியின் மரணத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 11 வருடங்கள் கடந்தும் நியாஸ் மௌலவியின் மரணத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை. 

Arafath saifullah (Haqqani) Thihariya சமூகத்திற்காக வாழ்க்கையை அற்பணித்த ஒரு ஆளுமையின் மரணம் ஆண்டுகள் பல கடந்தாலும் அது ஒரு அழியாத சுவடாக மனித உள்ளங்களில் பதிந்திருக்கின்றது. 

மர்ஹும் நியாஸ் மௌலவி அவர்கள் மரணித்து இன்றுடன் 11 வருடங்களாகின்றன. நியாஸ் முஹம்மத் என்ற உயர் விருட்சகத்தின் விஸ்தாரம் நிறைந்த வீரியம் இலங்கை முஸ்லீம்களின் சமூகப் பரப்பில் நிரப்பமுடியாத இடைவெளியாகவே இன்றுவரை காணப்படுகின்றது.

 உண்மையில் அன்னாரின் நினைவலைகள் கல்பையும் கண்களையும் இன்று வரை குளமாக்குகின்றது. கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகப் பணிப்பாளரும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகருமான அல்ஹாஜ் மெளலவி எஸ். நியாஸ் முஹம்மது (கபூரி) 2010,07,04 ஆம் திகதி அதிகாலை பதுளையில் காலமானார்.

 ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர் மரணிக்கும் போது வயது 57 ஆகும். பதுளையில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த போதே அங்கு அவர் மரணமடைந்தார். நியாஸ் மெளலவியின் ஜனாஸா செய்தியை கேட்ட சகல இன மக்களும் மதத் தலைவர்களும் இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரிக்கு விரைந்து தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர். 

இதேவேளை, பீர் ஸாஹிபு வீதியிலுள்ள இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ ஜனாஸாவுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார். 

1953 ஆம் ஆண்டு ஜனாப் சம்சுடீன் மற்றும் ஹாஜியானி ஸைனப் பீபீ ஆகியோருக்கு இரண்டாவது புதல்வராக தலவாக்கலையில் பிறந்த இவர், கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் சிங்கள மொழியில் கல்வி கற்றபின்னர் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் இஸ்லாமியக் கல்வியைத் தொடர்ந்தார்.

 இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியை உருவாக்கி கடந்த 25 வருடங்கள் அதன் ஸ்தாபகப் பணிப்பாளராகவும், விரிவு ரையாளராகவும் பணியாற்றினார். அதேபோன்று மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 

அரபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது, ஹிந்தி மற்றும் பாளி ஆகிய ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகிய ஐயமும் தெளிவும் நிகழ்ச்சி ஊடாகவும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொரமடலாவ நிகழ்ச்சி ஊடாக சிங்கள மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபல்யம் பெற்றார். 

இலங்கையில் சகல இனங்களுக் கிடையிலும் சமத்துவத்தை பேணுவதில் இவருடைய சேவை மிக முக்கியமானதாக கருதப்பட்டதால் இலங்கை அரசாங்கமும், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் ‘தேசபந்து’ ‘தேசகீர்த்தி’ ‘சமமான்ய’ ‘கீர்த்திஸ்ரீ’ பட்டமளித்து கெளரவிக்கப்பட்டார். 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட இவர், இலங்கை முஸ்லிம் சமாதான சபை தலைவர், மஜ்லிஸல் உலமா பவுண்டேஷன் போன்ற அமைப் புக்கள் மூலம் பல்வேறு சேவைகளை ஆற்றினார். 

யா அல்லாஹ் நியாஸ் மௌலவி அவர்களுடைய சகல பணிகளையும் கபூல் செய்து மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ c

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.