35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள். 

30 வயதை கடந்தும் திருமணமாகாத பெண்களும் உள்ளனர். வரதட்சணை வேண்டாம் என கூறி, திருமணம் செய்ய பல ஆண்கள் முன் வருகின்றனர். ஆனால். 

சொந்த வீடு இல்லாததையும், சொந்தத் தொழில் இல்லாததையும், தனக்கு நிகரான படிப்பு இல்லாததையும் காரணம் காட்டியே, ஆண்களை திருமணம் செய்ய எந்த பெண் வீட்டாரும் சரி, பெண்களும் சரி முன் வருவதில்லை என்பது கொடுமை.... பிறகு பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் எப்படி திருமணம் நடக்கும்? பையன் குணம் உள்ளவனா?, பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்வானா? என்பதை யோசிக்க மறந்து விடுகிறார்கள். 

ஆண்களும் சிலர்... தனக்கு வரப்போகும் பெண்... Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும். 

குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும். நடிகைகள் மாதிரி அழகாக இருக்கவேண்டும். என்று விரும்புகிறார்கள். பிறகு எப்படி திருமணம் நடக்கும்.? இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பதுதான்.

 ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள். வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம். திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ்பெற்ற மனிதர்கள் ஏராளம். 

முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம். எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மற்றும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யலாம். 

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு பணம் தேவைதான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது. சரியான கல்வியறிவு, நல்லொழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மண முடியுங்கள்... 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.