15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - தாய் உட்பட 32 பேர் இதுவரையில் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - தாய் உட்பட 32 பேர் இதுவரையில் கைது. 

15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் குறித்த சிறுமியின் தாயார் உட்பட 32 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (04) மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்வதற்காக மேலும் 4 இணையதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அவற்றுள் ஒரு இணையதளத்தை நடத்திச் சென்ற இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். . 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.