கடும் வெப்பம், ஒரு வாரத்தில் 719 பேர் உயிரிழப்பு - கொர வெப்பத்தினால் அவதிப்படும் கனடா.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


கடும் வெப்பம், ஒரு வாரத்தில் 719 பேர் உயிரிழப்பு - கொர வெப்பத்தினால் அவதிப்படும் கனடா. 

கனடாவில் கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பித்து 7 நாட்களில் மட்டும் 719 பேர் கடும் வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. 

கனடாவில் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது. 

அங்குள்ள லிட்டன் என்கிற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத வகையில் 49.6 செல்சியஸ் டிகிரி வெப்பம் பதிவானது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப நிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். 

மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொரோனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்து வருகின்றனர்.

 இந்நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி 7 நாட்களில் மட்டும் 719 பேர் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர். 

இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும், கொளுத்தும் வெயில் காரணமாக லிட்டன் கிராமத்தில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீ அந்த கிராமத்தில் பெரும் பொருள் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.