மேலும் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


மேலும் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில். 

நாட்டில் இன்றும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், ஒருபகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

 கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

👉யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்துறை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாரந்தனை வடமேல் பகுதியான தம்படி பிரதேசமும்

 👉மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகளும் 

👉களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட காவல்துறை அதிகாரப்பிரிவின் பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காவல்துறை அதிகாப்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர்- 2 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.