பேச்சுவார்த்தை தோல்வி. சுகாதாரப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀


 பேச்சுவார்த்தை தோல்வி. சுகாதாரப் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது.

சுகாதாரத்துறைசார் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் நாளாந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 சுகாதாரத் துறைசார் சில பணியாளர்கள் மாத்திரம் விசேடமாக கவனிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உட்பட மருத்துவ துறைசார் 14 தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. 

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். எனினும், தெரிவுசெய்யப்படட சில வைத்தியசாலைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறிப்பினும், இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கின்றது.

 இதேவேளை இந்த போராட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.