அடுக்கு மாடி கட்டட விபத்தில் 46 பேர் பலி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


அடுக்கு மாடி கட்டட விபத்தில் 46 பேர் பலி

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 46 ஆக உயா்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: சா்ஃப்சைட் பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

 இத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 46-ஆக உயா்ந்துள்ளது. அந்த விபத்துக்குப் பிறகு மாயமாகியுள்ள 99 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24 ஆம் திகதி இடிந்து விழுந்தது.

 மேலும் ,1981 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தின் மற்ற பகுதிகளையும் இடிக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.