July 12, 2021 at 08:46PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இன்றைய மருத்துவ குறிப்பு பயறுகளின் மருத்துவ குணங்கள். பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும். பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும். அவரைக் குடும்பத்து தாவரங்கள்தாம் இந்த பயறுகள். பாசிப்பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறுஉளுந்து, துவரை, மைசூர் பருப்பு, கொண்டைகடலை, பட்டாணி, ரஜ்மா..என இதன் பட்டியல் நீளம். முழுதாய் இருப்பின் பயறு என்றும், உடைத்து இருந்தால் பருப்பு என்றும் அழைக்கப்படும் இந்த உணவு ஓர் உன்னத உணவு. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய். தானியமும் பயறும் உணவுக்குடும்பத்தின் தலைவனும் தலைவியும் மாதிரி. ஒவ்வொரு தானியமும் ஒவ்வொரு வித புரதமும், கூடவே கார்போஹைட்ரேட்டும் கொண்டிருக்கும். பயறும் அப்படித்தான். அரிசியில் இல்லாத புரதச்சத்து பாசிப்பயறில் இருக்கும்; உளுந்தில் இருக்கும். பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். சாதாரணமாய் இருபத்தைந்து சதவிகிதம் புரதச்சத்தைத் தன்னுள் கொண்டிருக்கும் பயறுகள், வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவை. நோய் எதிர்ப்பாற்றல் நன்றாயிருக்க சரியான பயறு உணவு தினசரி அவசியம். தசைகளை இறுக்கமாக வளர்ப்பதற்கு பயறு அவசியம். கூடவே உடற்பயிற்சியும் வேண்டும். சர்க்கரை நோயாளிகளின் அலாதிப் பசியைப் போக்குவதிலும், அதனால் திடீர் சர்க்கரை உயர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதிலும் சிறப்பானவை.சர்க்கரை நோயில், இன்று வலியுறுத்தப்படுவது லோ கிளைசிமிக் உணவுகளைத்தான். பயறுகள் லோ கிளைசிமிக் தன்மை கொண்டவை. மாலை வேளையில் பசியுடன் இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய பாசிப்பயறு சுண்டலோ, சிவப்பு நிற மூக்குக் கடலைச் சுண்டலோ சிறந்த சிற்றுண்டிகள். அவை உடனடி பசியையும் குறைப்பதுடன், இரவில் அதிக பசியில், அதிக உணவை சாப்பிட்டு காலையில் இரத்த சர்க்கரை அளவு உயர்ந்து கலவரப்படுத்தாமல் இருக்க உதவிடும். புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் ஜீரணமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும். கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது. நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து வறுத்து உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும். பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும். உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின் பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும். தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது இது அதிகம் உதவுகின்றது. இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும். பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.பச்சைப் பயறின் தன்மை ஈரலின் ‌பிர‌ச்‌சினையை அ‌திகமா‌க்கு‌ம்.ப‌ச்சை‌ப் பயறை அ‌திக‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உட‌ல் அ‌திக கு‌ளி‌ர்‌ந்த த‌ன்மையை அடை‌ந்து‌விடு‌ம். எனவே ஆ‌ஸ்துமா, சைன‌ஸ் போ‌ன்ற நோயு‌ள்ளவ‌ர்க‌ள் கவனமாக கையாள வே‌ண்டு‌ம். பெரும்பாலான பயறுகள் கொழுப்புச் சத்து குறைவானவை.அல்லது கொழுப்புச் சத்து சற்றும் இல்லாதவை. பயறுகளின் அரசி என்றால் உளுந்தைச் சொல்லலாம். பெண்களின் கருப்பையை வளமாக்குவதில் உளுந்துக்கு இணையான உணவு ஏதும் இல்லை. சோயாவும் அது போன்றதே. உளுந்தின் முழுபயறை வாரம் இருமுறை செய்து வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டில் செய்வது நல்லது. உளுந்தைப்பொறுத்த மட்டில் வாய்ப்புக் கிடைத்தால் தொலி நீக்காதபடி பயன்படுத்துவது நல்லது. தொலியில் உள்ள நிறமிச் சத்து பல கருப்பை சார்ந்த நாட்பட்ட நோய்களை நீக்க்கூடியதும் கூட. பாசிப்பயறு, கொண்டைக்கடலை, இவற்றை முளைகட்டிச் சாப்பிடுவது அதன் புரதச்சத்து உடலில் விரைவாக சேர ஏதுவாகும். அதே நேரத்தில் முளை கட்டிய பயறுகள் உடல் எடை குறைத்திடவும் உதவிடும். ஆதலால், வளர வேண்டிய சிறு குழந்தைகளுக்கு வருத்து பொடித்த பயறுக் கஞ்சியும், உடல் எடை குறைய டயட்டில் இருக்கும் நபர்களுக்கு முளைகட்டிய பயறும் நலம் பயக்கும். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.