ஐந்து மாடிக்கட்டடம் தாழிறக்கம் - வாகன போக்குவரத்துக்கு தடை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


ஐந்து மாடிக்கட்டடம் தாழிறக்கம் - வாகன போக்குவரத்துக்கு தடை!

கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குருநாகல் – கண்டி வீதியில் கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு 02 கிலோமீற்றர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று நேற்று (12) மாலை தாழிறங்கியுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

அதனால் , மறு அறிவித்தல் வரை கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்தில் இருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய ,கட்டடம் தாழிறங்கியமையினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை. மேலும் ,இந்த சம்பவத்தினால் குறித்த வீதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.