அனைத்து பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள்/ பொறுப்பாளர்களுக்கும் விடயம் :

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அனைத்து பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள்/ பொறுப்பாளர்களுக்கும் விடயம் :


பள்ளிவாயல்களில் மேற்கொள்ளப்படவேண்டிய கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் 15/07/2021 தேதியிட்ட சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை இல. 

DGHS / Covid 19/347/2021 இன் அடிப்படையில், இலங்கை வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் வணக்கவாளிகளையும் பின்வரும் வழிகாட்டுதல்களை மிகவும் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது; 

👉 1. எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வழிபாட்டாளர்கள் 100 (நூறு மட்டும்) அனைத்து கோணங்களிலிருந்தும் தனி நபர்களிடையே ஒரு மீட்டர் உடல் தூரத்தை பேணுதல் வேண்டும். 

👉 2. வரிசைகள் (சப்f) இடையே ஒரு வரிசை (சப்f) இடைவெளி இடப்பட்டு தொழுகைகள் நடத்தப்பட வேண்டும். 

👉 3. ஜும்ஆ தொழுகையில் குத்பா மற்றும் தொழுகை 30 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும். 

👉 4. பள்ளிவாயலில் அனைவரும் எல்லா நேரங்களிலும் முகமூடி அணிய வேண்டும். 

👉 5. தொழ வருபவர்கள் தங்களது முஸல்லாக்களை கொண்டு வர வேண்டும் 

👉 6. தொழுகைக்காக வீட்டிலிருந்து விழூ செய்து கொண்டு வர வேண்டும். 

👉 7. பயணிகளுக்கு வெளி ஊர் பள்ளிவாயல்களில் தொழுவதற்கு அனுமதி இல்லை. 

👉 8. காய்ச்சல், இருமல், தடுமல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்றவை உள்ளவர்கள் பள்ளிவாயல்களுக்கு செல்லக்கூடாது. 

👉 9. கை குழுக்குதல் அல்லது கட்டியணைத்தல் (முஸாபஹா செய்தல்) போன்றன தவிர்க்கப்பட வேண்டும். 

👉 10. பள்ளிவாயல் மற்றும் அதனைச் சூழ வெறுமனே சுற்றித் திரிதல் தவிர்க்கப்படல் வேண்டும் 

👉 11. மேற் குறிப்பிடப்பட்ட சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட வேண்டும். 

இலங்கை வக்ப் சபையின் உத்தரவின்படி, ஏ.பீ.எம். அஷ்ரப் முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகளின் பணிப்பாளர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.