சுகாதார அமைச்சு PCR சோதனைகளை அதிகரிக்காவிட்டால் அடுத்த நான்கு வாரங்களில் நான்காம் அலை ஆபத்து. –ரவிகுமுதேஸ்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சுகாதார அமைச்சு PCR சோதனைகளை அதிகரிக்காவிட்டால் அடுத்த நான்கு வாரங்களில் நான்காம் அலை ஆபத்து. –ரவிகுமுதேஸ். 


சுகாதார அமைச்சு PCR சோதனைகளை அதிகரித்து மரபணுஆய்வுகளையும் அதிகரிக்காவிட்டால் அடுத்த நான்குவாரங்களில் நான்காவது அலை உருவாகலாம் என மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞான கல்லூரியின் தலைவர் ரவிகுமுதேஸ் எச்சரித்துள்ளார். 

PCR சோதனைகளை முன்னெடுப்பதற்கான திறனை அதிகரிக்குமாறு ஆய்வுகூட தொழிலாளர்கள் சுகாதார அமைச்சினை கோரி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலதிக PCR சோதனை இயந்திரங்களிற்கான அவசியமில்லை சுகாதார அமைச்சு விரும்பினால் தற்போது உள்ளவற்றை வைத்தே சோதனைகளை அதிகரிக்கலாம் என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

 தற்போதுள்ள வசதிகளை வைத்துக்கொண்டு PCR சோதனைகளை பல மடங்காகஅதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

சிறிய எண்ணிக்கையிலான நடமாடும் PCR ஆய்கூடங்கள் மூலம் PCR சோதனைகள் மற்றும் அறிக்கைகளை வெளியிடுவதில் உள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியும் என அரசாங்கத்திற்கு நாங்கள் எப்போதோ தெரிவித்துவிட்டோம், இது பிராந்திய நகரங்களில் காணப்படும் பல பிரச்சினைகளிற்கு தீர்வை காணஉதவியாக அமையும் குறிப்பாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை காண உதவும் என அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது ஆனால் சுகாதார அமைச்சு தேவையான சாதனங்களை பெறுவதை தாமதப்படுத்துகின்றது என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார். நடமாடும் PCR ஆய்வுகூடங்கள் செயற்படுவதை தடுப்பதற்கான நோக்கமாக இதனை கருதமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

மாதிரிகளை பெறுவது மருத்துவமனைகளில் கூட குறைவடைந்துள்ளது,ஆபத்தான பகுதிகள் என கருதப்படும் இடங்களை சோதனை செய்து முன்கூட்டியே பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எவையும இடம்பெறவில்லை, எனவும் தெரிவித்துள்ள அவர் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகள் யதார்த்தத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 மார்ச் ஏப்பிரல் மாதங்களில் நாங்கள் இவ்வாறான செயற்பாடுகளை அவதானித்தோம். நாங்கள் மீண்டும் தவறான முடிவுகளை எடுத்தால் அடுத்த நான்கு வாரங்களில் நாங்கள் மீண்டும் இன்னொரு அலையை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் தங்கள் எச்சரிக்கையை கைவிடக்கூடாது என்பதே நாங்கள் அவர்களிற்கு தெரிவிக்க விரும்புகின்ற ஒரே விடயம் எனவும் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.