சிறுவர்கள் ஆபத்தான கட்டத்தில் வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 சிறுவர்கள் ஆபத்தான கட்டத்தில் வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை!


இலங்கையில் கொவிட் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இதுவரை சுமார் 490 சிறுவர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். 

அவ்வாறே கொரோனா பரவல் ஆரம்பத்திலிருந்து இதுவரை கொவிட் காரணமாக 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பெற்றோர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், பிள்ளைகள் நோய் நிலைமைக்கு ஆளாகக் கூடிய ஆபத்து நிலைமை காணப்படுவதால், பெற்றோர் மிகவும் அவதானமாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ளுமாறு விசேட வைத்தியர் ஜீ. விஜேசூரிய மேலும் கோரியுள்ளார்.

 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உடனே கொரோனா அறிகுறிகள் வெளிக்காட்டாமல் இரு வாரங்கள் கடந்த பின்னர் ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, கண்கள் சிவத்தல், வாந்தி போன்ற நிலைமைகள் ஏற்படும். இவ்வாறான நோய் நிலைமைகளை அவதானித்தால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.

 இந்த நிலைமைகளின் காரணமாக உள் உறுப்புகள் வீக்கமடைய வாய்ப்புள்ளதாகவும், இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு உள்ளான ஐந்து சிறுவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த நோய் அறிகுறிகளால், சிறுவர்கள் உயிரிழக்கக்கூடிய நிலைமை உருவாக வாய்ப்புகள் இருப்பதால் பெற்றோர் மற்றும் வளர்ந்தோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, அண்மையில் சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.