இன்றைய மருத்துவ குறிப்பு காளானை யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இன்றைய மருத்துவ குறிப்பு காளானை யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? 


காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

காளான் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.காளானில் லென்டிசைன் மற்றும் எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள் நம் உடம்பில் ஓடும் ரத்தத்தை சுத்தமாக்க உதவுகிறது.காளானில் உள்ள புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. 

காளான் சூப் எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது. எனவே இந்த சூப்பை கடும் காய்ச்சல், உடல் இளைத்தவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். காளானில் உள்ள ப்ரோட்டீன், ஃபைபர் மற்றும் சில என்சைம்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதுடன் கரைக்கவும் உதவுகிறது. 

இரும்புச்சத்து அதிகம் உள்ள காளானை, இரும்புச்சத்து குறைபாடு, சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடலாம். காளான், நிறைய தண்ணீர், ஃபைபர் மற்றும் இன்சுலின் ஆகியவற்றை கொண்டுள்ளது. 

அதனால் இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வளவு நன்மைகளை வழங்கக்கூடிய காளான் சில கெடுதல்களையும் ஏற்படுத்தக்கூடியது. இதனை சரியாக பயன்படுத்தினால் அருமருந்து அதுவே தவறாக பயன்படுத்தினால் கொடிய விஷம். காளானை சுத்தப்படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். 

ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே எலுமிச்சைச்சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது. பின்னர் காளானை ஒரு துணியில் பரப்பி அதிலுள்ள ஈரம் காய்ந்தவுடன் சமைக்கவும். 

பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்று நாட்கள்வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. பாதியளவு எடுத்து உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் மீதியை உபயோகப்படுத்தலாம். ஆனால் திறந்து வைக்கக்கூடாது.ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடிவைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம்.

 ஆனால், அதுவே பிசுபிசுப்பாக மாறினால் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது. 

சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.