இலங்கைக்குள் இலகுவாக பரவும் டெல்டா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

இலங்கைக்குள் இலகுவாக பரவும் டெல்டா? 

உலகம் முழுவதும் பரவிவரும் டெல்டா வீரியம் கொண்ட வைரஸ், இலங்கையில் மிக இலகுவாக பரவும் அபாயம் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

 இதன்படி ,பல்வேறு வகையான கொவிட் திரிவுகள் உலகின் பல நாடுகளில் பரவி வருகின்ற நிலையில், டெல்டா திரிவு இலங்கையில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். டெல்டா வைரஸ் தாக்கத்திலிருந்து இலகுவாக இலங்கையினால் விடுப்பட முடியும் என தான் எண்ணவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 இருப்பினும் , இலங்கையில் தற்போது செலுத்தப்படும் அனைத்து வகையான தடுப்பூசிகளிலிருந்தும் டெல்டா வைரஸ் தாக்கத்திலிருந்து தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். 

மேலும், தென் அமெரிக்க நாடான பேருவில் பரவிவரும் லெம்டா வைரஸ், தற்போது பல நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். 

மேலும், அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் எப்ஸ்ஸயிலன் என்ற புதிய வகை கொரோனா திரிவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். 

அவ்வாறு ,உலகம் முழுவதும் பரவும் வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.