அரிசியை அதிக விலைக்கு விற்றால் 1 லட்சம் ரூபா அபராதம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரிசியை அதிக விலைக்கு விற்றால் 1 லட்சம் ரூபா அபராதம். 


அதிக விலைக்கு அரிசியை விற்கும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று(20) பாராளுமன்றில் தெரிவித்தார். 

நெல் மற்றும் அரிசியின் விலை எதிர்காலத்தில் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படும். அவற்றின் விலைகளை தனி நபர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தமது விருப்பப்படி தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார். 

அடுத்த இரு வாரங்களில் அனைத்து ஆலை உரிமையாளர்களுடனும் நெல் மற்றும் அரிசியின் விலை குறித்து ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படும் என அமைச்சர் கூறினார். 

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதற்கான 2500 ரூபா அபராதம் ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்கப் படுவதுடன் யால பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசியை அதிக விலையில் விற்க முடியாது எனவும் அவர் மேலும் கூறினார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.