நாட்டில் ’’TINEA’’ எனும் தோல் நோய் வேகமாக பரவுவதாக எச்சரிக்கை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாட்டில் ’’TINEA’’ எனும் தோல் நோய் வேகமாக பரவுவதாக எச்சரிக்கை 


வட மத்திய மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தோல் நோய் பரவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வகை பூஞ்சையால் ஏற்படும் TINEA என அடையாளம் காணப்பட்ட நோய் வேகமாக பரவி வருவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹேமா வீரகூன் தெரிவித்துள்ளார். 

சுற்றுச்சூழல் பாதிப்புகள், மருந்துகளுக்கு ஒவ்வாமை, தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்ளல் மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆகியவை தொற்று நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினரும் இந்நோயால் பாதிப்படைந்துள்ளனர்.

 இந்நோயிலிருந்து மீள சுமார் ஆறு மாதங்களுக்கு மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியதுடன், அவ்வாறு இல்லையெனில் தொற்று மோசமடையக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.