அம்மா அருகில் இல்லாதபோது.. தோள் கொடுத்து ஆறுதல் சொல்லும் உறவு..

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அம்மா அருகில் இல்லாதபோது.. தோள் கொடுத்து ஆறுதல் சொல்லும் உறவு.. 


அர்ச்சனா மகளின் உருக்கமான பதிவு பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள் ஸாரா ஷேர் செய்துள்ள உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது. பிரபல தொகுப்பாளினியின அர்ச்சனா விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் இதில் குழுவாக விளையாடியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். 

அதோடு ஆரியையும் டார்கெட் செய்ததால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அர்ச்சனா. இந்நிலையில் கடந்த வாரம் மூளையின் பக்கவாட்டில் திரவ கசிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி ஆகியிருப்பதாக கூறினார்.

 மேலும் மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்திருந்தார். தான் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்றும் தன்னுடைய உடல் நிலை குறித்த அப்டேட்டுகளை தனது மகள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார். அதைப்போலவே அர்ச்சனாவுக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது என்றும் அவர் நலமுடன் உள்ளார் என்றும் கூறியிருந்தார்.

 இதனிடையே அர்ச்சனா மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப ஒரு மாதம் ஆகும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் அர்ச்சனாவின் மகளான ஸாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். பிக்பாஸ் பிரபலமான சோம் சேகரின் தோளில் சாய்ந்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ள ஸாரா, சில நேரங்களில் உங்கள் அம்மா டவுனாக இருக்கும்போது, நீங்கள் எப்போதும் ஓய்வெடுக்க ஒரு தாயை போன்ற தோள் வேண்டும், எல்லாம் சரியாகிவிடும் என்று உங்களுக்கு சொல்ல வேண்டும். 

இதுவும் கடந்து போகும் என்று கூறவேண்டும்! அவர் அதைச் சொல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னால் அதை கேட்க முடிகிறது.. அம்மா சொல்வதைப் போல - "சத்தமாகவும் தெளிவாகவும், உலகம் அதைக் கேட்க முடியும் என்பதை போல" என பதிவிட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.