சீனாவில் சுரங்க ரயில் நிலையத்தை மூழ்கடித்த வெள்ளம் -

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சீனாவில் சுரங்க ரயில் நிலையத்தை மூழ்கடித்த வெள்ளம் -


புகையிரத்திற்குள் ஆயிரக்கணக்கான பயணிகள் - அவர்களின் கழுத்துவரை நீர் - பிபிசி சீனாவின் சுரங்க ரயில்நிலையத்தில் பெரும் வெள்ளம் நுழைந்தவேளை பலர் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறினார் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். 

ஒரு புகையிரத பெட்டியில் உள்ளே நுழைந்த வெள்ளம் பயணிகளின் கழுத்துவரை உயர்ந்தது- பதற்றமடைந்த பயணிகள் மூச்சுவிடுவதற்காக பெரும் சிரமப்பட்டனர், சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் வீடியோக்களில் அச்சமடைந்த மக்கள் கதிரைகளில் ஏறி நிற்பதையும் கூரைகளை பிடித்துக்கொண்டு நிற்பதையும் காண்பித்தன. 

ஒருவர் புகையிரதத்தின் கண்ணாடி உடைத்தார் ஆனால் வெளியே அதனை விட பெரும் வெள்ளம் காணப்படுவது அதன் பின்னரே அவருக்கு தெரியவந்தது. சிலர் அந்த துயரத்தை வீடியோவாக பதிவிட்டனர், சிலர் தங்களிற்கு தெரிந்தவர்களிடம் உதவி கோரினார்கள். 

என்னால் பேசமுடியவில்லை என சமூக ஊடகமான வெய்போவில் பெண் ஒருவர் பதிவிட்டார். 20வது நிமிடங்களில் எவரும் வராவிட்டால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழப்போம் என அவர் குறி;ப்பிட்டார். நாங்கள் புகையிரத சீட்களில் ஏறி நின்றோம், நீர் ஏற்கனவே எங்கள் முழங்கால் அளவிற்கு நின்றது என லிஎன்ற பெண் எலிபன்ட் நியுசிற்கு தெரிவித்தார். 

உயரம் குறைந்த சிலரின் கழுத்து வரை நீர் காணப்பட்டது.காற்று முற்றாக இல்லாமல் போனது என அவர் தெரிவித்தார். ஒரு மணிநேரத்தின் பின்னர் புகையிரதபெட்டி மேலும் இருளில் மூழ்கியது ஒக்சிசன் முற்றாக இல்லாத நிலை உருவாகியது.நான் மிகவும் அச்சமடைந்தேன் - மிகவும் அச்சப்படவைத்த விடயம் வெள்ளநீர் இல்லை - ஒக்சிசன் இல்லாததே அச்சப்படவைத்தது என ஒருவர் ரொய்ட்டருக்கு தெரிவித்தார். 

பல மணிநேர நிச்சயமற்ற நிலை பதற்றமான நிலைக்கு பின்னர் மீட்பு பணியாளர்கள் புகையிரதத்திற்குள் நுழைந்தனர். நாங்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்தோம் சிறிது காற்று வந்தது என பெண்ணொருவர் தெரிவித்தார். மத்திய ஹெனான் மாநிலத்தின் மஞ்சள் ஆற்றின் கரையில் இருக்கும் செங்;சூநகரின் சுரங்க புகையிரதநிலையத்திலிருந்த பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டனர்.

 12 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இன்னமும் அந்த பயங்கர அனுபவம் குறித்த விபரங்கள் வெளியாகியவண்ணமுள்ளன. பலர் அவ்வேளை காணப்பட்ட அச்சநிலை குழப்பநிலை குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். முதலில் வெள்ளம் பெரிதாகயிருக்கவில்லை பின்னர் அது பெருமளவில் உள்ளே வரத்தொடங்கியது என பெண்ணொருவர் தெரிவித்தார். 

30 நிமிடங்களில் அது என தோள் உயரத்திற்கு வந்தது -சுவாசிக்க முடியவில்லை -பலர் மயக்கமடைந்தனர் என அவர் தெரிவித்தார். நான் நான்கு மணிநேரம் சிக்குண்டிருந்தேன் வெளியே மீட்கப்பட்டவேளை அழுதேன் என பெண்ணொருவர் தெரிவித்தார். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.