இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகி பாபு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யோகி பாபு


22 Jul 1985 (Age 35) யோகி பாபு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான "லொள்ளு சாப" தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள, இவர் வெள்ளித்திரையில் யோகி திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

 இப்படத்திற்கு பின்னர் இவர் தனது பாபு என்னும் பெயரினை யோகி பாபு என தமிழ் திரைத்துறையில் மாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பல தடைகளை கடந்து ஒரு நகைச்சுவளராக பிரபலமாகியுள்ள இவர், மூன்று முறை ஆனந்த விகடன் சார்பில் சிறந்த நகைச்சுவையாளர் விருதினை பரியேரும் பெருமாள், கோலமாவு கோகிலா, ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். 

👉பிறப்பு / தனிப்பட்ட வாழ்கை பாபு, 1985 இல் ஜூலை 22ஆம் நாள் பிறந்துள்ளார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர்.

 தனது பள்ளி படிப்பினை ஜம்மு காஸ்மீர் நகரத்தில் கற்றுள்ளார் இவர். 2020 ஆண்டு பிப்ரவரி 5ல் மஞ்சு பார்கவி என்பவரை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்துள்ளார்.

 👉திரையுலக தொடக்கம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சின்னத்திரை நகைச்சுவை தொடரான "லொல்லு சாப" தொடரில் ஒரு நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

 இத்தொடரினை இயக்குனர் ராம் பாலா இயக்கியுள்ளார். பின் தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக இரண்டு வருடங்கள் பயணித்துள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் இயக்குனரும், நடிகருமான அமீர் நடித்த யோகி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

 இப்படத்திலிருந்து இவர் யோகி பாபு என தனது பெயரினை மாற்றிக்கொண்டார். பல போராட்டங்களுக்கு பின்னர் யோகி திரைப்படத்தில் யாரும் கண்டறியப்படாத கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான இவர், பின்னர் பையா திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர் சி யின் கலகலப்பு திரைப்படத்தில் பிம்ப் ஏன்னும் கதாபாத்திரத்திலும், வேலாயுதம் திரைப்படத்தில் ஒரு கிராமத்து வாசியாகவும், பின் அட்டகத்தி, சூது கவ்வும், பட்டத்து யானை என பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். 

2014 ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள "வௌவால்" கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்திற்கு சென்று பிரபலமானது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த அரண்மனை, ஜெய் ஹிந்த் 2 போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்துள்ளது.

 குறிப்பாக இவர் 2014-ஆம் ஆண்டு வெளியான "யாமிருக்க பயமேன்" என்ற நகைச்சுவை திகில் திரைப்படத்தில் இவரது "பண்ணி முஜி வாயன்" கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் பிரபலமானது. 

👉பிரபலம் தமிழ் சினிமாவில் தனது உருவத்தால் பல நடிகர்களால் இகழப்பட்ட யோகி பாபு, தனது விடா முயற்ச்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் தற்போது ஒரு முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட நாயகனாக பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். 

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் யாரும் கண்டறியப்படாத பல கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் இவர் நகைச்சுவை நடிப்பில் வெளியான மான் கராத்தே, யாமிருக்க பயமேன், காக்கி சட்டை, நாலு போலீஸும் நல்ல இருந்த ஊரும், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ஆண்டவன் கட்டளை, ரெமோ, கோலமாவு கோகிலா, பரியேரும் பெருமாள் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக உயர்த்தியுள்ளது.

 தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், சில காலத்திற்கு பின்னர் நாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது முன்னணி நடிப்பில் தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா என பல படங்கள் வெளியாகியுள்ளது. ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.