இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சிவகுமார்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா சிவகுமார் 


23 Jul 1975 (Age 45) சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். சரவணன் என்னும் இயற்பெயர் கொண்டு திரையுலகில் அறிமுகமான இவர், சூர்யா என பெயர்மாற்றம் செய்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார்.

 இவர் தமிழ் திரையுலகில் பெற்ற வெற்றியை கொண்டு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமாகியுள்ளார். 

👉பிறப்பு / குடும்பம் இவர் தமிழ் திரையுலகின் 1965-ல் திரையுலகில் அறிமுகமாகி 1970 முதல் 1980-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் ஆவார். தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் பிறந்துள்ளார்.

 இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்தவர். தற்போது சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதிரியும், ஒரு சகோதரரும் உள்ளார். இவரின் தம்பி கார்த்தி தமிழ் திரையுலகில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது தம்பியும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராவார். 

இவர் ஜோதிகா என்னும் திரைப்பட நடிகையை காதலித்து செப்டம்பர் 11, 2006- ல் திருமணம் செத்துள்ளார். இவர்களுக்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர். 

👉திரைப்பட தொடக்கம். சூர்யா 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜயுடன் துணை நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்திற்கு பின்னர் பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார் என பல திரைப்படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். 

👉பிரபலம். இவர் தமிழ் திரையுலகிற்குள் 1997-ஆம் ஆண்டு அறிமுகமாகினும், துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். 1999-ல் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான பூவெல்லாம் கேட்டுப்பார்திரைப்படத்தினை இவர் நடித்த நந்தா, பிரெண்ட்ஸ், உன்னை நினைத்து ஆகிய திரைப்படங்கள் தமிழில் பிரபலமானது. இவர் காக்க காக்க, பிதாமகன், கஜினி திரைப்படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகரானவர். 

👉அங்கீகாரம். இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது மற்றும் இவர் இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். 

👉விளம்பரங்கள். சூர்யா, திரைப்படத்தை தவிர, 2006-ல், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்பீஸ்ட், 2010-ம் ஆண்டு, சரவணா ஸ்டோர்ஸ், பாரதி சிமெண்ட்ஸ் மற்றும் இமாமி நவரத்தினா தயாரிப்புக்காகவும், 2011-ம் ஆண்டு, க்ளோஸ் அப், 2012-ல், மலபார் கோல்ட் என்ற நகை குழு அமைப்பிற்காகாவும் விளம்பரங்களில் நடித்தார். 2013 -ம் ஆண்டு, அவருக்கு தென் இந்தியாவின் சிறந்த ஆண் தூதராக தேர்ந்தெடுத்து எடிசன் விருதுகள் (இந்தியா) வழங்கப்பட்டது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ #WHATSAPP_GROUPS 👇👇👇👇 https://ift.tt/3pNtsux #FACEBOOK_PAGE 👇👇👇 https://ift.tt/3hk68md #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://t.me/itmchan WEBSITE 👇👇👇 https://ift.tt/3bgkArn #விளம்பரங்களுக்கு 👇👇👇 https://ift.tt/3fKZbt1
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.