சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் கைது. 


12 வயது மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில், 15,16 வயதுகளுடைய சிறுவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 அதன்படி ,இந்த சம்பவம், மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேசத்திலே​யே இடம்பெற்றுள்ளது. நாவுல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் யு.ஜி.பி. ரத்னாயக்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவ்விரு சிறார்களும் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும்,சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவ்விரு சிறுவர்களும் நாவுல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

அத்துடன், அவ்விரு சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.