குழந்தைகள் மனநிலையை பாதிக்கும் கொரோனா -

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

குழந்தைகள் மனநிலையை பாதிக்கும் கொரோனா - 

எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை. குழந்தைகள் மனநிலையை கொரோனா பாதிக்கும் என டெல்லி எய்ம்ஸ் மனநல மருத்துவப் பிரிவு நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார் குழந்தைகள், உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், மென்மையானவர்கள்.

 எந்தவித மனஅழுத்தம், கவலை, அதிர்ச்சியாக இருந்தாலும் அது அவர்களை ஆழமாக பாதிக்கும் மற்றும் நீண்டகால விளைவுகளுக்கு வழிவகுக்கும். கொரோனா தொற்று, குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகளை மாற்றிவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

கல்வி முறை ஆன்லைனுக்கு மாறிவிட்டது. சக நண்பர்களுடன் பேசுவது குறைந்துவிட்டது. அதோடு, சில குழந்தைகள் பெற்றோர்கள், உறவினர்கள் அல்லது பராமரிப்பாளர்களை இழந்திருக்கின்றனர், இவை எல்லாம், குழந்தைகளின் மனநலத்தை பாதிக்கும்.

 அவர்கள் இழந்துள்ள உணர்வுபூர்வமான சூழல், அவர்களின் இயல்பான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கியம். மன அழுத்தமான சூழ்நிலைகளில், பெரியவர்கள் போல் அல்லாமல், குழந்தைகள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். 

சில குழந்தைகள் ஒட்டிக் கொள்ளும், சிலர் விலகியிருப்பர், சில குழந்தைகள் ஆவேசமடையும், சில குழந்தைகள் மனச்சோர்வுடன் இருக்கும். குழந்தைகள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த, அவர்களுக்கு உகந்த சூழல் வழங்கப்பட வேண்டும். அவர்களால் பேசமுடியவில்லை என்றால், படங்கள், ஓவியங்கள் மற்றும் இதர வழிகளில் தங்கள் கருத்தை தெரிவிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். 

அதனால் குழந்தைகளின் நடத்தைகளை பெரியவர்கள் கவனிப்பது முக்கியம் என எய்ம்ஸ் மனநல மருத்துவப் பிரிவு மருத்துவர் ராஜேஷ் சாகர் அறிவுறுத்தியுள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.