இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலாநிதி மாறன்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலாநிதி மாறன் 


24 Jul 1964 (Age 56) கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதன் முதலாக நுழைந்தார். 

இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளவர. ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம் பெரும் பணக்காரர் ஆவார். இவரின் தந்தையார் முரசொலி மாறன் தமிழகத்தில் அரசியல்வாதியாக பணியாற்றினார்.

 தம்பி தயாநிதியும் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சராவார். இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன் வழி பேரன் ஆவார். இவர் ஆரம்பத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். 

அந்த நிறுவனம் தொடர் இழப்புகள் மூலம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட பொழுது, அந்த நிறுவனத்தை அதனுடைய பங்குதாரர்களில் ஒருவருக்கு விற்று விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். 1993 ஆம் ஆண்டில் சன் டிவி நிறுவனம் உருவானது. 

தமிழில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக, கன்னடத்தில் 'உதயா', தெலுங்கில் 'ஜெமினி', மலையாளத்தில் 'சூர்யா', அலைவரிசைகளை உள்ளடக்கிய 'சன் நெட்வொர்க்' என்ற குழுமத்தை நிறுவினார். அதை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் பல திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்துள்ளார். 

மேலும் சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.