தொடரும் அதிபர்கள் – ஆசிரியர்களின் போராட்டம்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 


தொடரும் அதிபர்கள் – ஆசிரியர்களின் போராட்டம்...

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 17ஆவது நாளாக இன்றும் (28) தொடர்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது. 

அதனையடுத்து , ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இத்தோடு , எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம் பிரதமர் கூறியுள்ளார். 

மேலும் ,இந்த நிலையிலேயே, இணையவழி கற்பித்தல் முறையில் இருந்து விலகி தாம் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை வரை தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.