எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

லிட்ரோ - லாஃப் மற்றும் புதிய நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு விலையை அதிகரிக்க பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. 

உள்நாட்டு சந்தைகளில் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு இந்நாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளன. 

லாஃப் எரிவாயு நிறுவனம் அண்மையில் விலை உயர்த்தியது. ஆனால் இன்னமும் நட்டத்தில் செல்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் நஷ்டத்தில் வியாபாரத்தை முன் னெடுத்துச் செல்கிறது. 

உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளமையால் எரிவாயு விலையை அதிகரிக்குமாறு அந்த நிறுவனம் அரசாங்கத்திற்கு யோசனை ஒன்றை முன் வைத்துள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்னமும் கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். லிட்ரோவின் எதிர்காலம் முற்றிலும் ஆபத்தில் உள்ளது என்றும் அவர்கள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.