தலைமன்னாரில் 79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தலைமன்னாரில் 79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்.

தலைமன்னார் – ஊருமலை கடற்கரையில் 79 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் (Crystal Methamphetamine -ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 வடமத்திய கடற்படை முகாமினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (14) நள்ளிரவு ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 9.9 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

படகொன்றில் போதைப்பொருளை கொண்டு வந்த போது, 28 மற்றும் 36 வயதுடைய தலைமன்னார் ஊருமலை பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.