தமிழ்நாட்டின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தமிழ்நாட்டின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், இதனை உலகறிய செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சேர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி கோரப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 அதனையேற்று சிலம்பம் விளையாட்டினை மத்திய அரசின் விளையாட்டுத்துறை அங்கீகரித்து, புதிய கேலா இந்தியா திட்டத்தின் கீழான விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல் என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

இந்த அங்கீகாரம் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகக் கூறியுள்ள அமைச்சர், ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.