பிரித்தானியாவில் பாரிய உணவு தட்டுப்பாடு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பிரித்தானியாவில் பாரிய உணவு தட்டுப்பாடு.

மக்கள் எதிர்நோக்கவுள்ள நெருக்கடி பிரித்தானியாவில் இன்னும் இரண்டு வார காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கோவிட் பரவலுக்கு பிறகு பிரித்தானியாவின் பொருளாதார மீட்சியை சேதப்படுத்தும் வகையில் ரஷ்யா எரிவாயு விலைகளில் மாற்றம் செய்துள்ளமையே இவ்வாறான நிலை உருவாக காரணமெனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பில் Gazprom நிறுவனம் மீது விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதுடன்,மேலும் அமைச்சர்கள் குழுவும் சிக்கலைச் சமாளிக்க உணவு உற்பத்தியாளர்களுடன் அவசர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 இதுமட்டுமின்றி, உணவு உற்பத்திக்கான கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறையால் நாட்டின் வடக்கில் இரண்டு உர ஆலைகள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 கோவிட் சோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சாரதிகள் பற்றாக்குறையால் உணவுப்பொருட்கள் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. 

மாமிச உணவு தொழிற் கூடங்களும் தற்போது கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப மாதங்களாக ஐரோப்பாவில் எரிவாயு விலையில் உயர்வால், ஐரோப்பிய மின்சார செலவுகளை பல வருட உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், இங்கிலாந்தில் மின்சார விலை திங்கள் அன்று இயல்பை விட 11 மடங்கு உயர்ந்து காணப்பட்டுள்ளது. 

இந்த நிலையிலேயே ரஷ்யாவின் Gazprom நிறுவனம் மீது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், சமீப விலை உயர்வுகளுக்கு ரஷ்யாவே காரணமாக இருக்கலாம் எனவும் பிரித்தானியாவின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

 ஆனால் Gazprom நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை மட்டுமே தாங்கள் நிவர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3hvbABX
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.