கொழும்பை ஆட்டிப்படைக்கும் எலிக்காய்ச்சல் நோய்த்தாக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொழும்பை ஆட்டிப்படைக்கும் எலிக்காய்ச்சல் நோய்த்தாக்கம்.

இரண்டு நாட்களில் இரண்டு உயிரிழப்பு. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றையடுத்து தற்போது எலிக்காய்ச்சலும் பரவ ஆரம்பித்துள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

கொவிட் வைரஸ் தொற்றையடுத்து இந்த எலிக்காய்ச்சல் தென்னிலங்கையில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இருவர் இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

 அதனடிப்படையில், ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையும், பென்தர, கோனகலபுர பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இருவரும் வயல் வேலையில் ஈடுபடுபவர்கள் எனவும், அவ்வாறு வயலில் வேலை செய்கொண்டிருந்த போதே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனையடுத்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எலிக்காய்ச்சலினால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.