சதொச வெள்ளைப்பூடு மோசடி: மேலும் இருவர் கைது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சதொச வெள்ளைப்பூடு மோசடி: மேலும் இருவர் கைது

வெள்ளைப்பூடு மோசடியில் சதொச அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

 சதொச கூட்டுறவு நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளைப்பூடு மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணையில் சதொச அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாக மேலும் இரு சந்தேக நபர்கள் பேலியகொட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு நாளைய தினம் வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் வெள்ளைப்பூடு கொள்வனவு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகரின் கையாட்களாவர். 

வெள்ளைப்பூடு கொடுக்கல் வாங்கல் நிறைவடைந்த பின் பல இலட்சக் கணக்கான பணத்தை இலஞ்சமாகச் செலுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கடந்த காலங்களில் இரு சந்தேக நபர்களும் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

வெள்ளைப் பூடு மோசடி தொடர்பாக சதொச அதிகாரி கைது செய் யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளார் என்றும் மேலும் தொடர்புடைய நபர்களை இந்த மோசடி தொடர்பில் கைது செய்வதற்காக விசார ணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.