அரசாங்கம் விரும்பினாலும் தனியார் பேருந்துசேவையை முழுமையாக ஆரம்பிக்க முடியாத நிலை- கெமுனு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

அரசாங்கம் விரும்பினாலும் தனியார் பேருந்துசேவையை முழுமையாக ஆரம்பிக்க முடியாத நிலை- கெமுனு

போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக 30,000 தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர் 

ஒருமாதகாலமாக தரித்துநிற்பதால் 75 வீதமான பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியாத நிலை நாடு மீண்டும் முடக்கப்பட்டால் தங்கள் நிலைமை என்னவாகும் என உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

 போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக 30,000 தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளனர் தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுகுவிஜயரட்ண தெரிவித்துள்ளார். 

ஒருமாதகாலமாக தரித்துநிற்பதால் 75 வீதமான பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 

தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த சாரதிகளும் உதவியாளர்களும் வேறு வேலைகளை தேடிசென்றுவிட்டனர் வாழ்க்கைகக்கான தங்கள் சுயமுயற்சிகளை ஆரம்பித்துள்ளனர் அரசாஙகம் எந்த நஸ்டஈட்iயும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு அப்பாலும் பல பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகின்றது அவற்றை உரிமையாளர்களே இயக்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார், நாடு மீண்டும் முடக்கப்பட்டால் தங்கள் நிலைமை என்னவாகும் என உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

 அவர்கள் தங்களிற்கு தொழில்பாதுகாப்பு இல்லை என தெரிவிக்கின்றனர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.

 15000 பேருந்துகளை பெருமளவு பணம் செலவழித்து திருத்தவேண்டியுள்ளது அதன் பின்னரே அவற்றை இயக்க முடியும் ஆனால் வருமானம் இல்லாமல் அதற்கு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக அரசாங்கம் விரும்பினாலும் சேவைகளை மீள முழுமையாக ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாக கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.