பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு...

மில்க்ரோ நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை, 470 ரூபாய் வரையில் அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளது. 

இருப்பினும் இதுதொடர்பில், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார். 

அதேநேரம், பெல்வத்த நிறுவனம் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இதற்கமைய 380 ரூபாவாக இருந்த குறித்த நிறுவனத்தின் 400 கிராம் பால்மா பொதியின் விலை, தற்போது 460 ரூபாயென விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 டொலர் தொடர்பான பிரச்சினைக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 250 ரூபாவால் அதிகரிக்க கடந்த 9ஆம் திகதி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

 அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் புதிய விலை 1,195 ரூபாவாக உள்ளது. மேலும் ,400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 480 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://t.me/itmchan
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.