சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற யூனிவர்சல் பாஸ்;கிறிஸ் கெய்ல் மற்றும் பிராவோ

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற யூனிவர்சல் பாஸ்;கிறிஸ் கெய்ல் மற்றும் பிராவோ

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்களில் அவுட்டான கிறிஸ் கெய்ல், கேலாகலமாக ரசிகர்களுக்கு பேட்டை உயர்த்தி காட்டிய படி ஆடுகளத்திலிருந்து வெளியேறியது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே இழந்துவிட்டது. 

இந்நிலையில், இன்று அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் குரூப் 1ல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் அதன் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் விளையாடின. 

இப்போட்டியில் தோற்றால் ஆஸ்திரேலிய அணி கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா உடனான போட்டிக்கு பின் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸின் ஆல்-ரவுண்டர் பிராவோ நேற்றே அறிவித்துவிட்டார்.

 இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸின் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய யூனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவுட்டாகிய கெய்ல் பேட்டையும் ஹெல்மட்டையும் ரசிகர்களுக்கு உயர்த்திக் காட்டிய படி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பின், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் கெய்லை கட்டி தழுவி வாழ்த்தினர். 

இதன் மூலம் கெய்ல், இந்த போட்டியுடன் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை சூசகமாக அறிவித்தாரா என ரசிகர்களிடையே கேள்வி நிலவுகிறது. கெய்ல் ஏற்கனவே ஓய்வு பெற்று மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், கெய்ல் தொடர்ந்து வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவார் என கூறப்படுகிறது. அதேசமயம், தனது கடைசி பேட்டியில் பேட்டிங் செய்த பிராவோ 10 ரன்களில் அவுட்டாகினார்.

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில அபார வெற்றிப்பெற்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.