நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்...

இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. 

கிளிநொச்சி ஏ - 9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். 

பரந்தன் பகுதியில் உள்ள கட்டட உற்பத்தி நிலையத்திற்கு சீமெந்து இறக்கிய பின்னர் பாரவூர்தி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவேளை, அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரவூர்தியின் பின் பக்கத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

 விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ம. யூட்பவிஷன் வயது 29 குமரபுரம் பரந்தன் என்ற இளைஞனும் ச.காந்தீபன் வயது 34 இல 61 கண்டி வீதி பரந்தனை சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளனர்.

 உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.