நியூசி - ஆஸி மோதல்.. வெல்லப்போவது யார்?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நியூசி - ஆஸி மோதல்.. வெல்லப்போவது யார்?

உலகக் கோப்பை டி 20 இறுதிப்போட்டியில் இன்று நடக்கும் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான டி 20 உலகக் கோப்பை 2021 தொடர் இன்றோடு முடிவிற்கு வருகிறது.

 யாருமே எதிர்பார்க்காத வகையில் கணிப்புகளை புறக்கணித்துவிட்டு இரண்டு பெரிய அணிகள் பைனலுக்கு வந்துள்ளது.

 இந்த போட்டியில் நியூசிலாந்து அணிதான் சிறப்பான பேட்டிங்இ வலுவான பவுலிங் என்று முழு ஆல் ரவுண்டர் அணியாக உள்ளது.

 ஆஸ்திரேலியா அணியிடம் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங் அவ்வளவு வலிமையாக இல்லை.

 ஆனால் எப்போது இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலியா உயிரை கொடுத்து ஆடி வெற்றிபெறும் என்பதால் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 2015ல் நடந்த உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் ஏற்கனவே நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது.

 அதில் 183 ரன்கள் மட்டுமே 45 ஓவரில் நியூசிலாந்து எடுத்தது. 33.1 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 186ஃ3 ரன்கள் எடுத்து வென்றது. இந்த நிலையில் 2015 உலகக் கோப்பை பைனலுக்கு பழி தீர்க்க இன்று ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து எதிர்கொள்ள உள்ளது. 

நியூசிலாந்து அணி முழுக்க மார்டின் குப்தில்இ டார்லி மிட்சேல்இ ஜேம்ஸ் நீசம்இ இஷ் சவுதிஇ டிரெண்ட் போல்ட் ஆகியோர் அணியின் மேட்ச் வின்னர்களாக இருக்கிறார்கள். அந்த அணியில் இவர்கள் 5 பேரும் நினைத்தால் ஆட்டத்தின் முடிவை எந்த நொடியிலும் மாற்ற முடியும்.

 முக்கியமாக டார்லி மிட்சேல் டிரெண்ட் போல்ட் இருவரும் இன்று நியூசிலாந்து அணியின் மிகப்பெரிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் பாட் கும்மின்ஸ் மிட்சல் மார்ஷ்ஆடம் சாம்பா ஆகியோர் முக்கியமான கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள். 

அது போக மேக்ஸ்வெல் நல்ல பார்மில் இருப்பதால் இன்று அதிரடியாக ஆடும் பட்சத்தில் அவர் மொத்தமாக ஆட்டத்தை மாற்றும் வாய்ப்புகளும் உள்ளன. இவர்கள் 5 பேர் நினைத்தால் ஆஸ்திரேலியாவிற்கு முதல் டி 20 உலகக் கோப்பையை வாங்கி கொடுக்க முடியும். 

இவர்கள்தான் இன்றைய ஆட்டத்தில் கேம் சேஞ்சர்களாக இருக்க போகிறார்கள். இது போக இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சன் முக்கியமான போட்டிகளில் பொறுப்பாக ஆடுவார் என்பதால் அவரின் ஆட்டமும் கவனிக்கப்படும். 

2021 டி 20 உலகக் கோப்பை தொடரில் புதிய சாம்பியன் வர உள்ளதால் இன்றைய ஆட்டம் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.