இலங்கையிலும் 'ஜெய்பீம்' சம்பவமா? இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையிலும் 'ஜெய்பீம்' சம்பவமா? இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்.

பனாமுரே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பனாமுரே பொலிஸ் சிறைக்கூண்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குடும்ப தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட பனாமுரே, வெலிபோத யாய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸ் சிறைக்கூண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தை அடுத்து இன்று (17) காலை பனாமுரே பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய பிரதேச மக்கள், இந்த மரணத்திற்கு பொலிஸாரே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.