40,000 கிலோ உருளைக் கிழங்கு மீட்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

40,000 கிலோ உருளைக் கிழங்கு மீட்பு.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 40,000 கிலோகிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலன் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள களஞ்சியசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகளால் இந்தக் கொள்கலன் மீட்கப்பட்டுள்ளது. இதற்கமைய , குறித்த உருளைக்கிழங்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 அந்த உருளைக்கிழங்கு தொகையைப் பாவனைக்குப் பயன்படுத்தும் வகையில் சேவையாளர்களை கொண்டு பொதி செய்து சந்தைக்கு விநியோகிக்கத் தயார்ப்படுத்தப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ,முன்னதாக குறித்த களஞ்சியசாலை உரிமையாளர் பாவனைக்கு உதவாத பெரிய வெங்காய தொகையை பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்திருந்தபோது, தம்புள்ளை மாநகரசபையின் சுகாதார பிரிவினரால் அவை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.