தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அதிகளவு மரக்கறிகள் - விலைகள் சற்றுக் குறைவு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அதிகளவு மரக்கறிகள் - விலைகள் சற்றுக் குறைவு.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று (23) அதிகளவு மரக்கறிகள் வந்து சேர்ந்ததாகவும் அண்மைக்கால மரக்கறிகளின் மொத்த விற்பனை விலைக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு 50 முதல் 60 ரூபா வரை குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்றைய தினம் மலையகத் திலிருந்து கரட், லீக்ஸ், பீற்றூட், கோவா ஆகிய மரக்கறிகள் கிடைத்துள்ளன. 

சில காய்கறிகளுக்கு அதிக விலை கிடைத்தாலும், அந்த விலைக்கு விற்கப்படாததால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு இன்று கத்தரிக்காய், பயற்றங்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற மரக்கறிகள் கணிசமான அளவில் கிடைத்துள்ளதாகவும் தொலை தூரப் பகுதிகளிலிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள மையே விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.