வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன்.
கொரோனா வைரஸ் வகையின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக உலக நாடுகள் முக்கியத்துவம் செலுத்தாமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் வகையின் ஒமிக்ரோன் திரிபு தொடர்பாக உலக நாடுகள் முக்கியத்துவம் செலுத்தாமை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அதன்படி ,இதுவரையிலும் அடையாளம் காணப்பட்ட கொரோனா வகைகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் திரிபானது முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்துடன் , ஒமிக்ரோன் திரிபு பல நாடுகளில் பரவி வருகின்றது, ஆனால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பல நாடுகளில் ஒமிக்ரோன் திரிபின் பரவலைக் குறைத்து மதிப்பிடுவது குறித்து தான் கவலையடைவதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபின் பரவலை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்றால் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக உயர்வடைந்து, சுகாதாரத் துறை வீழ்ச்சியடையக்கூடும் என்றும் அவர் உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.
மேலும் அதேவேளை , தற்போது 77 நாடுகளில் ஒமிக்ரோன் திரிபு பரவியுள்ளது. ஐரோப்பா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலும் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருகிறன்றதுடன், ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான முதலாவது மரணம் அண்மையில் பிரித்தானியாவில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) மேலும் தெரிவித்துள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.