பாரிய மண்மேடு சரிவு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பாரிய மண்மேடு சரிவு.

ஒரே குடம்பத்தை சேர்ந்த 03 பேர் வைத்தியசாலையில்! பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அதில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் கிங்கொரோ பிரிவில் நேற்று (13) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்பக்கமாக இருந்த மண்திட்டே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது.

 சம்பவத்தில் காயமடைந்து மூன்று பேரில் தாயும் மகளும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 இந்த அனர்த்தத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்றும் 32 வயது தாய் ஒருவரும், 65 வயது ஆண் ஒருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

சம்பவத்தில் வீட்டில் இருந்த உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/kOcVsNg
https://ift.tt/D68SMLI

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.